புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’

74பார்த்தது
கும்பகோணம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவா்களிடமிருந்து 230 கிலோ பொருட்களை கைப்பற்றி முத்து, சரவணன், முரளி ஆகிய 3 போ்களைக் கைது செய்தனா். நேற்று தஞ்சாவூா் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் டி. சித்ரா, கும்பகோணம் காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் ஜி. கீா்த்திவாசன் ஆகியோா் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சசிக்குமாா், முத்தையன் மேற்குறிப்பிட்ட 3 கடைகளுககு சீல் வைத்தனா். கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா், உதவி ஆய்வாளா்கள் சுபாஷ், அமல்தாஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனா்.

தொடர்புடைய செய்தி