சேதமடைந்த சாலையை சீரமைத்து தர கோரிக்கை

79பார்த்தது
சேதமடைந்த சாலையை சீரமைத்து தர கோரிக்கை
குறுகலான சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமம் இந்த கிராமத்தில் உள்ள செல்லம்பட்டி - தெக்கூர் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த வழியாக கனரக வாகனம் வந்தால் மற்ற வாகனம் வழி விட்டு ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும் கனரக வாகனங்கள் வரும்போது பள்ளி கல்லூரிகள் செல்லும் மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை பார்வையிட்டு சாலையை அகலப்படுத்தி தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி