பட்டுக்கோட்டை மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு ஸ்கூட்டி

73பார்த்தது
பட்டுக்கோட்டை மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு ஸ்கூட்டி
பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு ரூ. 5 லட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை எம். எல். ஏ. அண்ணாதுரை தலைமை வகித்தார். தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆலத்தூர் வனிதா, செம்பாளூர் வடுவுச்சந்திரன், பழவேறிக்காடு கலைமாறன், நெம்மேலி செல்வகுமார். மூத்தாகுறிச்சி பன்னீர்செல்வம் ஆகிய 5 பேருக்கு ரூ. 5 லட்சத்தில் மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டிகளை பட்டுக்கோட்டை எம். எல். ஏ. அண்ணாதுரை வழங்கினார். இதில் மக்கள் பிரதிநிதிகள், பயனாளிகளின் உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி