தாய்லாந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாய்லாந்தின் பிராச்சின் புரியில் சுற்றுலாப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து கீழே விழுந்துள்ளது. பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. காயமடைந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.