அலுவலக காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்: ஆசிரியர் சங்கம்

75பார்த்தது
அலுவலக காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்: ஆசிரியர் சங்கம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செ. ராகவன் துரை தலைமையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட (தொடக்கக் கல்வி) அலுவலர் வ. மதியழகனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  

அதில்,"பட்டுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர்கள் (2 ), அலுவலக உதவியாளர் (1), இரவு காவலர் (1) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. 109-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 400க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களது பணி சார்ந்து, பணப் பலன் சார்ந்த கோரிக்கைகளை பரிசீரித்து நடவடிக்கை எடுத்திட போதுமான அலுவலகப் பணியாளர்கள் இல்லாததால் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.  

ஆசிரியர்களின் நலம் சார்ந்தும், கல்வி நலனைக் கருத்தில் கொண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மாற்றுப்பணி அடிப்படையில் குறைந்தபட்சம் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆவன செய்ய வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. நிகழ்வில் மாவட்ட தலைவர் க. அருள், மாநில செயற்குழு உறுப்பினர் ச. துரைப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆ. பாஸ்கர் மற்றும் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டார செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி