மதம் மாறினால் பணம் தருவதாக இளைஞரிடம் ரூ. 4. 88 லட்சம் மோசடி

1566பார்த்தது
மதம் மாறினால் பணம் தருவதாக இளைஞரிடம் ரூ. 4. 88 லட்சம் மோசடி
மதம் மாறினால் ரூ. 10 கோடி தருவதாகச் கூறி இளைஞரிடம் ரூ. 4. 88 லட்சம் மோசடி செய்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கைது செய்யப் பட்டார்.
தாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞருக்கு கைப்பேசி செயலி வாயிலாக சொக்கநாதன் என்ற பெயரில் ஒருவர் பேசியுள்ளார். மதம் மாறினால் ரூ. 10 கோடி தருவதாக அவர் கூறியதுடன், அதற் காக அமெரிக்காவில் வங்கிக் கணக்கு தொடங்குதல், வருமான வரி செலுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் தேவைப்படுகிறது என்றாராம்.
அதை இளைஞர் நம்பி, அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு ரூ. 4 லட்சத்து 88 ஆயிரத்து 159-ஐ அனுப்பினாராம். பின்னர், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதையறிந்த இளைஞர் சைபர் குற்றப்பிரிவு இணைய தளத்தில் புகார் அளித்தார்.

மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்தனர். தொழில் நுட்பரீதியிலான விசாரணையில், இம்மோசடியில் ஈடுபட்டவர் தஞ்சாவூர், ஆனந்தம் நகரைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் ராஜவேல் (31) எனத் தெரியவந்தது.

அவரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக் கிழமை (ஏப். 26) கைது செய்து அழைத்துவந்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் நேர்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி