ஒரத்தநாடு கிணற்றில் விழுந்த முதியவர் தீயணைப்பு வீரர் மீட்பு

53பார்த்தது
ஒரத்தநாடு கிணற்றில் விழுந்த முதியவர் தீயணைப்பு வீரர் மீட்பு
கிணற்றில் விழுந்தவரை தீயணைப்புதுறை வீரர்கள் மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் வடக்கு தெருவில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் 40 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஒரத்தநாடு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் அனந்த சயனன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் ஏணி மற்றும் உபகரண பொருட்களோடு இறங்கி தவறி விழுந்த முதியவரை பத்திரமாக மீட்டனர்.

விசாரணையில் ஒரத்தநாடு புதூர் கிரா மத்தை சேர்ந்த சதாசிவம் (55) போர் செட்டிற்கு குளிக்க சென்ற பொழுது அருகில் இருந்த பழமை வாய்ந்த 40 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக தெரிவித்தார். அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட் டார்.

இது தொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி