உமையாள்புரம் ஶ்ரீவீர காளியம்மன் ஆலய திருவிழா

53பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே உமையாள்புரத்தில் ஸ்ரீ வீர காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழாவை  முன்னிட்டு உமையாள்புரம் காவிரியாற்று கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகுகாவடி எடுத்து அம்மன் வேடமிட்ட திருநங்கை பால் குடத்திற்கு முன்னதாக திரு நடனமாடிய படி முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் சென்று ஆலயத்தை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
விழா ஏற்பாடுகளை நாட்டாண்மைகள், விழா குழுவினர் மற்றும் கிராமவாசிகள், இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி