திருக்கருக்காவூர் சாந்த அய்யனார் கோவில் திருவிழா

1058பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் அம்பலக்காரத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த அய்யனார் கோவிலில் பால்குடம், காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக இக்கோவிலில் அமைந்துள்ள காளியம்மனுக்கு பூத்தட்டு எடுத்தல்,ஓம் சக்தி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல் போன்ற விழாக்கள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஶ்ரீ சாந்த அய்யனார், ஸ்ரீ காளியம்மனுக்கு
ஆற்றங்கரையில் இருந்து பால்குடம் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  

ஆலயத்தில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கஞ்சிவார்த்தலும், இரவு சுவாமி புறப்பாடும் சக்தி கரகம் எடுத்தாலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடு திருக்கருக்காவூர் அம்பலக்கார தெருவாசிகள், நாட்டாமை பஞ்சாயத்தர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி