தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே தென்னஞ்சோலை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், வீரமாகாளியம்மன், அய்யனார், பிடாரி அம்மன், முனியாண்டவர் கோவிகளில் ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு கிராம தெய்வங்களுக்கு அபிஷ ஆராதனையும், அம்மன் அலங்காரமும், வீதி உலா காட்சியும்
நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வெண்ணாற்றங்கரையிலிருந்து
பால்குடம் சுமந்து, அழகு காவடி
எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடைபெற்றறு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்னஞ்சோலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தென்னஞ்சோலை நாட்டாண்மைகள் பஞ்சாயத்தார்கள், கிராமவாசிகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றம், மகளிர் சுய உதவி குழுவினர் செய்திருந்தனர்.