பாபநாசத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 
விவசாயிகள் சங்க
மாவட்ட செயலாளர் சாமு. தர்மராஜன் தலைமையில்
கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும்,   குருவை தொகுப்பு திட்ட கணக்கெடுப்பு பணிகளை உடனே தொடங்கி பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் திட்டம் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்சூரன்ஸ் பதிவு செய்ய வசதியாக தாமதம் இன்றி அடங்கல் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 
அழுகிய பருத்தி செடிகளை கையில் வைத்துக் கொண்டு
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து. தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்
பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் அவர்களிடம் மனு கொடுத்தனர்.  
ஏ ஐ டி யூ சி மாநில செயலாளர் 
ஆர். தில்லைவனம்
மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், வி டு சா கௌரவத் தலைவர் ஆர் பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், பொன். சேகர், புகழேந்தி, உள்ளிட்ட பொறுப்பாளர்கள்,   தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி