ராஜகிரி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

61பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் தலைமை வகித்து மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெங்கடேசன், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர்  நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் தீபக் வரவேற்று பேசினார்.
 மருத்துவ முகாமில் டாக்டர் ஜெகன் சிறப்பு மருத்துவர்கள் கௌரிசங்கர், சந்திரகுமார் பிரவீனா, கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் கலந்துகொண்டு பொது மருத்துவம் மனநலம் குழந்தைகள் நலம் பெண்கள் நலம் மகப்பேறு பல் மருத்துவம் கண் மருத்துவம் இயன்முறை சித்தா காசநோய் தொழுநோய் உள்ளிட்ட மருத்துவ சேவைகளை செய்தனர் முகாமில் 1072 பயணிக்கள்  கலந்து கொண்டு பயன்பெற்றனர் முகாமில் முன்னோடி விவசாயி நூறுமுகமது முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஷ்ரப் அலி வட்டாரமேற்பர்வையாளர்  கணேசன் சுகதார ஆய்வாளர்கள் செல்லப்பா  நாடிமுத்து ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் பகுதி சுகாதார செவிலியர்கள் ஊட்டசத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி