மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வேண்டி அரசுக்கு கோரிக்கை

76பார்த்தது
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வேண்டி அரசுக்கு கோரிக்கை
டெல்டா மாவட்டங்களில்  சம்பா, தாளடி , நெல் சாகுபடி மற்றும் நேரடி விதைப்பு நடைபெற்று உள்ளது. இதுவரையில் மழை பெய்து கொண்டிருந்ததால், ஒரளவிற்கு நெல் பயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. தற்போது கடந்த 10நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால் பூக்கும் தருணத்தில் உள்ள பயிர்கள் வாடி வருகின்றன.   மேலும் ஏரிகள், குளங்களில் தண்ணீர் குறைவாக உள்ளது. ஆகையால் தொடர்ந்து 10 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. மேட்டூர் அணை எப்போதும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விட்டு ஜனவரி 28 ம் தேதி மூடுவது வழக்கம். ஆனால்  கடந்த 75 நாட்களாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.
தற்போது மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய நிலவரபடி சுமார் 32 டி எம் சி அளவிற்கு தண்ணீர் உள்ளது. மேலும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கேட்டு பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள நடப்பு நெல் பயிர்களை காப்பாற்றவும், ஏரி குளங்கள் நிரப்பவும் தொடர்ந்து 10 நாட்கள் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விட உத்தரவிடுமாறு டெல்டா விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.  
என்று கணபதிஅக்ரஹாரம் முன்னோடி விவசாயி சீனிவாசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி