பகுதி நேர அங்காடி கேட்டு போராட்டம்-

59பார்த்தது
அம்மாபேட்டை அருகே
வடக்குதோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி கேட்டு
புளியக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுசீந்திரன், டி. குமார் தலைமையில் தஞ்சாவூர் நாகை சாலையில் புத்தூர் ரோடு அருகில் தொடர் காத்திருப்பு 
போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார் துவக்கி வைத்தார். இந்தப் போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் திருநாவுக்கரசு, மணிகண்டன், ரமேஷ், ராமலிங்கம் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். இப்போராட்ட குழுவினருடன் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன், அம்மாபேட்டை ஒன்றியகுழு தலைவர் கலைச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றிய குழு துணை தலைவர் தியாக சுரேஷ் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய், ராஜன், கூட்டுறவு சார் பதிவாளர் விஜய மாலா ஆகியோர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புளியங்குடி ஊராட்சி வடக்கு தோப்புபகுதியில்  தற்காலிகமாக பகுதி நேர அங்காடியில் நகரும் அங்காடி மூலம் அத்தியாவசிய பொருள் வாரம் இருமுறை வழங்குவது என கூறப்பட்டதை தொடர்ந்து இதனை ஏற்றுக் கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர். பேச்சுவார்த்தையில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, முதுநிலை ஆய்வாளர் வரதராஜன், வருவாய் ஆய்வாளர் மாலினி, கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேலன், வங்கி செயலாளர் மதியழகன், விற்பனையாளர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி