குற்றங்கள் தடுப்பது குறித்து காவல்துறை பொதுமக்கள் கூட்டம்

59பார்த்தது
குற்றங்கள் தடுப்பது குறித்து காவல்துறை பொதுமக்கள் கூட்டம்
தஞ்சை மாவட்டம்,
பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி கிராமத்தில் மது , போதை பொருட்கள் பயன் படுத்துவதால் குற்றங்கள் பெருகி வருவதை தடுக்கும் வகையில்  கிராம கண்காணிப்பு கமிட்டி அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் திருவையாத்துக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலாதர்மராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி. சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசும்போது இளம் தலைமுறையினர் குறிப்பாக மாணவர்கள் மது, போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்  இதனால்  கிராமங்களில் குற்றங்கள் பெருகி வருகிறது மது போதை பொருட்கள் பயன்படுத்துவதால் வளர் இளம் தலைமுறையினர் போதை பொருள்களுக்கு அடிமையாகி கல்வி, உடல் நலம் பாதிக்கக்கூடும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும்  அதனால்  பிள்ளைகளை, மாணவர்களை, இளைஞர்களை.   பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் பொதுமக்கள் போலீஸ்க்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருக்கனும் அப்போது தான் குற்றங்களை தடுக்க முடியும் கஞ்சா, குட்கா போன்ற பொருட்கள் கிராமத்தில் விற்பனை செய்தலே எவரும் பயன்படுத்தினால் போலீஸ்க்கு தகவல் கொடுக்கலாம் என பேசினர்.
இந்நிகழ்ச்சியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அனந்தநாயகி, வார்டு உறுப்பினர்கள் கலைச்செல்வன், தனபால் , கலைவாணி மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி