மஸ்கட்டில் இருக்கும் மகளை மீட்டுத்தர பெற்றோர்கள் கோரிக்கை

3290பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பண்டாரவாடை கோயில்தேவராயன் பேட்டையில் வசித்து வரும் கலையரசி, சாட்சிநாதன் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்து வருகின்றனர். கணவர் சாட்சிநாதன் உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். கலையரசி தனது பிள்ளைகளுடன் தாய் கண்ணகி தகப்பனார் சௌந்தர்ராஜன் உடன் வசித்து வருகிறார்.  

குடும்ப வறுமையின் காரணமாக கலையரசி அய்யம்பேட்டையில் ஒரு ஏஜென் மூலம் ஏற்பாடு செய்து மஸ்கட் நாட்டிற்கு வீட்டு வேலை செய்வதற்காக சென்றிருந்தார். மஸ்கட் சென்று 3 மாத காலமே ஆன நிலையில் உடல் நிலை பதிப்பின் காரணமாக வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் அனுப்பி வைத்த ஏஜன்டிடம் என் மகளை ஊருக்கு அனுப்ப சொல்லுங்கள் நாங்கள் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அனுப்பிய ஏஜன்ட் மஸ்கட்டில் உள்ள ஏஜன்டிடம் பணம் 2 லட்சம் திரும்பி கொடுத்தால் மட்டுமே கலையரசியை இந்தியாவிற்கு அனுப்ப முடியும் என  தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் செய்வதரியாது இது சம்பந்தமாக பெற்றோர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் கலையரசியை மீட்டுத் தரும்படி கோரிக்கை மனு அளித்துள்ளனர். உடல் நலம் சரியில்லாமல் இருந்து வரும் தனது மகளுக்கு வைத்தியம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால், கலையரசியை உடனடியாக மீட்டு தரும்படி பெற்றோர்கள் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி