பாபநாசம் ஒன்றியம், பண்டாரவாடை ஊராட்சிக்குட்பட்ட பார்வதிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் சுடுகாட்டிற்கு
பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 17 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட மயான கொட்டகை,
சுற்றுக்சுவர் மற்றும் சிமெண்ட் அணுகு சாலை
பணிகள் நிறைவுற்றது. பணிகளை
பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா எம் எல் ஏ பார்வையிட்டார்.
பாபநாசம் திமுக ஒன்றிய செயலாளர் என். நாசர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சுதா, மாவட்ட கவுன்சிலர் பாத்திமா ஜான் ராயல் அலி, ஒன்றிய கவுன்சிலர் அனீஸ் பேகம் முகம்மது பாருக், ஊராட்சி மன்றத் தலைவர் மரியம் பீவி அப்துல் காதர், துணைத் தலைவர் சுல்தானா அஷ்ரப் அலி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அறிவழகன், மமக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், தமுமுக மாவட்ட செயலாளர் சலீம், மமக ஒன்றிய தலைவர் கலீல் ரஹ்மான், ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் கிராம பெரியவர்கள், ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.