மாலைக்கு பதிலாக பணமாக வழங்குவோம்- விழிப்புணர்வு பிரச்சாரம்

566பார்த்தது
பாபநாசம் தாலுக்கா,   வன்னியடி கிராமத்தை சேர்ந்த காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிந்து  வரும் ஆசைத்தம்பி என்பவர் இறந்தவர் வீட்டுக்கு மாலை வாங்கி செல்வது வீண் செலவு மாலைக்கு பதில்  பணமாக வழங்கினால் அந்த குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  
அவர் கூறுகையில் இறந்தவர் வீட்டுக்கு செல்வோர் பெரும்பாலானோர் 200, 300 ரூபாய் செலவு செய்து பூமாலைகள்  வாங்கி சென்று இறந்தவர் உடலுக்கு அணிவிக்கின்றனர்.
அந்த பூமாலைகள் ஒருசில  நிமிடத்திலேயே  அப்புறப்படுத்தப்பட்டு இறுதி ஊர்வலத்தின் போது பூமாலைகள் சாலைகளில் வீசப்படும் அவலநிலை உள்ளது.
 யாருக்கும் பயன் இன்றி பல ஆயிரம் ரூபாய் பணம் விரயம் ஏற்படுகிறது.  
மாலைக்கு பதில் பணமாக வழங்கினால் இறந்தவர் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் அதுபோல பல்வேறு விழா நிகழ்ச்சிகளில் சால்வை அணிவிக்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது சால்வைக்கு பதிலாக புத்தகம் வழங்கினால்  அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என தனது பிரச்சாரத்தில் கூறி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி