பாபநாசத்தில் கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

4872பார்த்தது
பாபநாசத்தில் கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம், சுந்தர பெருமாள் கோவில் தோப்பு தெருவில் வசித்து வந்தவர் ராஜேந்திரன்(வயது 60), குடிப்பழக்கம் உள்ளவர். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்காததால் மனம் உடைந்த ராஜேந்திரன் பாபநாசம் தாலுக்கா ஆபிஸ் ரோட்டில் எஸ். எம். ஏ நகரில் ஒரு பூவரசு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவருடைய மனைவி அமுதா வயது 50, கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், ஏட்டு கார்த்திகேயன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து பிரேத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி