கபிஸ்தலம் ஸ்ரீ சுந்தர காளியம்மன் கோவில் திருநடன திருவிழா

57பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் 
தெற்குசெங்குந்தர்தெரு அருள்மிகு ஸ்ரீ சுந்தரமகா காளியம்மன் ஆலய
திரு நடன திருவிழா மே 20 ஆம் தேதி முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டு சக்தி கரகம் புறப்பாடு, காளியம்மன், மாரியம்மன் வீதி உலா, மறுக்காப்பு கட்டுதல், துர்கா தேவி எல்லை வலம் வருதல், காளிகாதேவி எல்லையை வலம் வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பச்சைக்காளி, பவளக்காளி, அம்பாள் படுகளம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர், கிராம நாட்டாண்மைகள், மற்றும் முதலியார் தெரு கிராமவாசிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி