விவேகானந்தா கல்வி சங்கம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்

61பார்த்தது
தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா கல்விச் சங்க வளாகத்தில்
மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். மற்றும் விவேகானந்தா கல்வி சங்கம்  இணைந்து  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.  
முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு  பாபநாசம் விவேகானந்தா கல்வி சஙக தலைவர் தேவராஜன், செயலாளர் தங்க கண்ணதாசன், முன்னிலை வகித்தனர். கண் சிகிச்சை முகமை கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தீபக் தொடங்கி வைத்தார். முகாமில் கண் மருத்துவ உதவியாளர்கள் ரெங்கராஜ், மற்றும் ரெங்கநாயகி ஆகியோர்  கண் சம்பந்தமான குறைபாடுகளுக்கு சிகிச்சை மற்றும்  ஆலோசனை வழங்கினர்.   முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான குறைபாடுகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர். இதில் கண்புரை முற்றிய நிலையில் இருந்த நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக  தஞ்சை அரசு கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை விவேகானந்தா கல்வி சங்க  நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் களப்பணியாளர்கள் செய்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி