மிளகாய் செடியில் பூக்கள் கீழே உதிர்ந்து, விளைச்சல் பாதிப்பு

84பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சுற்றுவட்டார பகுதியிளான இளங்கார்குடி, வன்னியடி, தென்செருக்கை, அக்கரைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 100-ஏக்கரில் மிளகாய் பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகசூல் நன்றாக இருந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையினால், மிளகாய்ச் செடி பயிர்களில் பூக்கள் கீழே கொட்டி உதிர்ந்து விட்டதால், சந்தையில் மிளகாய் நல்ல விலைக்கு விற்கின்ற போதிலும், மிளகாய் விளைச்சல் இல்லாமல் போனதால், பாபநாசம் சுற்றுப்பகுதி விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பதாக மிளகாய் பயிர் செய்துள்ள  விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மிளகாய் பயிர்களை பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டும் மிளகாய் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி