ரயில் மறியல்  செய்ய முயற்சித்த விவசாயிகள் தடுத்து நிறுத்தும்

4690பார்த்தது
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாபநாசத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத்தலைவர் பழனியப்பன் தலைமையில் தஞ்சை மாவட்ட தலைவரும், காவலூர் ஊராட்சி மன்ற தலைவருமான என். செந்தில்குமார், மாவட்ட செயலாளர் பாட்சா ரவி. தெற்குமாவட்ட செயலாளர் மணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

போராட்டத்தில்  டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேச மறுப்பதை கண்டித்தும், குறைந்தபட்ச ஆதார விலைக்கான எம் எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை  நிறைவேற்ற காலம் கடத்தும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகளை  உடனடியாக அழைத்து பேசி தீர்வு காண மத்திய அரசு முன்வர வலியுறுத்தியும்  தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில்  பாபநாசத்தில் ரயில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  போராட்ட குழுவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன், மாநகர செயலாளர் அறிவு உள்பட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி