வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு

71பார்த்தது
வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோபுராஜபுரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.  29 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் அதே கோபுரராஜபுரம் ஊராட்சியில் ரூ. 1 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகள், திருப்பாலைத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேய பள்ளி கட்டிடம் நிதி ரூ. 32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடம்ஆக மொத்தம் ரூ 1 கோடியே 83 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது உடன் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சுவாமிநாதன், சரவணன், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் வெற்றிச்செல்வி, காயத்ரி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மெகராஜ் பானு ஆகியோர் உடன் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி