பஞ்சாமிர்தம் விற்பனை ஸ்டால் ரூ.18 லட்சத்திற்கு ஏலம்

75பார்த்தது
பஞ்சாமிர்தம் விற்பனை ஸ்டால் ரூ.18 லட்சத்திற்கு ஏலம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்தாண்டு பஞ்சாமிர்தம் விற்பனை ரூ.18 லட்சத்து 18 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இக்கோவிலில் 2024 ஜூலை 1 முதல் 2025 ஜூன் 30 வரையான சில்லரை குத்தகை உரிம பொது ஏலத்தில் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கோவிலில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை ரூ.18 லட்சத்து 18 ஆயிரத்துக்கும், முடி சேகரிக்கும் உரிமம் ரூ.4.25 லட்சம், உயிர் பிராணிகளை சேகரிக்கும் உரிமம் ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 500, சரவணப் பொய்கையில் பரிகாரம், பால்குடம், காவடி செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலுக்கு ரூ.95 ஆயிரம் எனவும் ஏலம் போனது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி