நோயினால் செங்கரும்பு பாதிப்பு- நிவாரணம் வேண்டி கோரிக்கை

587பார்த்தது
நோயினால் செங்கரும்பு பாதிப்பு- நிவாரணம் வேண்டி கோரிக்கை
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே. எஸ். முகமதுஇப்ராஹிம் விடுத்துள்ள
கோரிக்கையில் கூறியிருப்பதாவது: -
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில்  கல்யாணாபுரம், பொன்னாவாரை, கன்டியூர், மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்து உள்ளார்கள். செங்கரும்பு சாகுபடியில் மஞ்சள் நோய், குருத்துப்பூச்சி நோய் தாக்குதலில் பல ஏக்கர் கரும்பு பயிர்கள் பாதிப்பாகி உள்ளது.
கடன் வாங்கி கஷ்டப்பட்டு செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நோய் தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
தமிழக அரசு உடனடியாக வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு கொண்டு பாதிக்கப்பட்ட செங்கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 25 ஆயிரம்  நிவாரணம் வழங்க வேண்டுமென்றும்,
அரசு வழங்கும் பொங்கல் சிறப்பு பரிசு திட்டத்தில் வழங்கும் செங்கரும்பு மற்றும் இதர பொருள்கள் வெளி மாநிலங்களில் இருந்து வாங்காமல் அந்தந்த மாவட்டத்தில் விவசாயிகளிடம்  அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி