மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்

65பார்த்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்
பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்
சின்னை பாண்டியன் , பாபநாசம் மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன், பாபநாசம் நகர செயலாளர் சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகேசன். மகேந்திரன், ராமதாஸ் , அருள், கஸ்தூரி , மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினார்கள். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது எனவும், பாபநாசம்- அய்யம்பேட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், அய்யம்பேட்டை மதகடி பஜார் பகுதியில் சிறு பாலம் கட்டுமான பணியினை விரைவாக முடிக்க வேண்டும் எனவும், ராஜகிரி எம்ஜிஆர் நகர் பகுதியில் புறம்போக்குநிலத்தில் குடியிருந்துவரும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும், பாபநாசம் தாலுகாவில்  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கும் கொள்முதல் நிலய பணியாளர்கள் மீது தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி