சாலியமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் குறைதீர்ப்பு முகாம்.

73பார்த்தது
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம். சாலியமங்கலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை ஒன்றிய குழு தலைவர்
கே வீ. கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (சத்துணவு)தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், நவரோஜா, ஒன்றியகுழு துணைப் தலைவர் தியாக சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் பி. எஸ் குமார், பாபநாசம் தாசில்தார் செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் எஸ். கே. முத்துச்செல்வன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சார துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, உள்பட 15 துறைகளை சார்ந்த கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. முகாமில் மகளிர் சுய உதவி குழு வினர்க்கு 48 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாலியமங்கலம் சக்தி சிவகுமார், திருபுவனம் ஜெயந்தி கோவிந்தராஜன், அருமளக்கோட்டை செல்வராஜ், எடவாக்குடி விஜயகுமார், உள்ளிட்ட  உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், ஊரக வளர்ச்சித்த்துறை அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி