பாபநாசம் அருகே சாலிய மங்கலம் அடுத்த கீழ கோயில் பத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. பாபநாசம் எம். எல். ஏ ஜவாஹிருல்லா பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம், அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன், திமுக அம்மாப் பேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ், அம்மாப் பேட்டை பேரூர் செயலர் ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு தியாகராஜன், பாபநாசம் தாசில்தார் செந்தில் குமார், அம்மாப் பேட்டை பிடிஓக்கள் ராஜன், நவ ரோஜா உட்பட ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
இதில் மருத்துவம், மக்கள் நல் வாழ்வு, மது விலக்கு, கூட்டுறவு, பிற்பட்டோர் நலம், மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகள் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பங்கேற்றன.
நெய் குன்னம், மகிமாலை, நெடுவாசல், கீழக் கோயில் பத்து, உக்கடை உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை தீர்விற்காக அளித்தனர். இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிக்கான செக் வழங்கப் பட்டது.