பண்டாரவாடையில் திமுக தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சி

548பார்த்தது
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக  திமுக தஞ்சை வடக்கு மாவட்டம் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் பண்டாரவாடை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு  பிஸ்கட், பிரட் வழங்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கும் கட்சியினர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் யூசுப்அலி,
மாவட்ட அமைப்பாளர் பாவை அனிபா, மாவட்ட துணை அமைப்பாளர் ராயல் அலி, ஒன்றிய கவுன்சிலர் முகமது இப்ராஹிம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பரீத்கான், பண்டாரவாடை கிளைக் கழகச் செயலாளர் பஜ்ஜிர்ரகுமான்,
 உட்பட கட்சி முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முயற்சி ஏற்பாடு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் பண்டாரவடை கட்சி பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி