மது போதை தீமைகள்  குறித்த விழிப்புணர்வு

85பார்த்தது
மது போதை தீமைகள்  குறித்த விழிப்புணர்வு
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் ராராமுத்திரைகோட்டை ஊராட்சியில் மது போதையினால் உண்டாகும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சோழன் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு கலந்து கொண்டு ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட (சிசிடிவி)  கண்காணிப்பு காமிரா பயன்பாட்டை தொடங்கி வைத்து 
மது போதையினால் உண்டாகும் தீமைகள் குறித்தும் பெருகி வரும் குற்றங்களை தடுப்பது குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது  அனைத்து குற்றங்களும் மது, போதை பொருள் பயன்படுத்துவதால்  நடைபெறுவதாக குறிப்பிட்டார் அதோடு  அதிகமாக விபத்துகள் ஏற்படுவதாகவும் கிராமப்புறங்களில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க  தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை நிறுவ வேண்டும் அதோடு 
கிராம கண்காணிப்பு  கமிட்டி ஒன்றை  ஏற்படுத்தி கண்காணிப்பதோடு குற்றங்களை தடுக்க  பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குகநேசன், தலைமை காவலர் அறிவழகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் புனிதா பிரகலாதன், ஊராட்சி செயலாளர் அசோக் 
 மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள்  பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி