ஆப்தீன் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆண்டு விழா

1896பார்த்தது
ஆப்தீன் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆண்டு விழா
தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறை ஆப்தீன் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர்
ஒ எஸ் ஜே
காஜாமைதீன் விழாவிற்கு தலைமை வகித்தார். பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன், பள்ளிநிர்வாகி ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக
பள்ளி நிர்வாக இயக்குனர் சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்று பேசினார்.  
பள்ளி முதல்வர் செல்வி, துணை முதல்வர் சாஹிரா ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
 விழாவில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நடிகை பரீனா ஆசாத் கலந்து கொண்டு விளையாட்டு  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிளுக்கும், சிறப்பாக செயல்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கி மாணவர்களை பாராட்டி பேசினார்.   இறுதியில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you