சாத்துக்குடி பழம் விற்பனை அமோகம் 2 கிலோ ரூ. 100க்கு விற்பனை

61பார்த்தது
சாத்துக்குடி பழம் விற்பனை அமோகம் 2 கிலோ ரூ. 100க்கு விற்பனை
கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் அதிகளவில் சாத்துக்குடி பழங்களை வாங்கி செல்கின்றனர். விலை குறைந்து இருப்பதால் சாத்துகுடி விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. '
2கிலோ சாத்துக்குடி ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சாவூர், காய்கறி, பழ மார்க்கெட்டுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வருகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் சாத்துக்குடி பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். கோடை வெயிலில் இருந்தும், தண்ணீர் தாகத்தையும் போக்கும் விதமாக ஆங்காங்கே ஒலிப்பெருக்கி கட்டப்பட்ட வேன்களில் சாத்துக்குடி குவியல், குவியலாக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் நான்கு சக்கர வாகனத்தில் சாத்துக்குடி பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரித்து உள்ளதால் சாத்துக்குடி விலை சரிந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ. 45 முதல் ரூ. 50 வரை விற்பனை ஆகிறது. அதேபோல் சில்லரை விற் பனை நான்கு சக்கர வாகனத்தில் 2 கிலோ சாத்துக்குடி ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் சாத்துக்குடி பழங்களை வாங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி