கோடைகால நீர்மோர்  தண்ணீர் பந்தல் திறப்பு

66பார்த்தது
கோடைகால நீர்மோர்  தண்ணீர் பந்தல் திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ரெகுநாதபுரம் ஊராட்சி நெடுந்தெரு கிராமத்தில் உத்திராபதியார் ஆலயத்தில் தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநிலத்தலைவர் சசிகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் , பாணகம், குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நிர்வாகிகள் குமர ஆனந்தன் , அதியமான், சங்கரநாராயணன், சரவணன், கோவிந்தராஜ், கணேசன், பார்த்திபன் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி