உடல்நல விழிப்புணர்வு முகாம்

55பார்த்தது
உடல்நல விழிப்புணர்வு முகாம்
தஞ்சாவூர் அருகே அருந்தவபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தஞ்சை கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் புற்றுநோய் மற்றும் உடல் நல விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது. ரோட்டரி கிளப்தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். ரோட்டரியன் ஆல்பர்ட் சுரேஷ். உதவி ஆளுனர் கருணா, செயலர் தார்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் டாக்டர்கள் இளங் கோவன், ராமச்சந்திரன், ரமேஷ்குமார், ஸ்ரீரஞ்சனி பிரகாஷ் பங்கேற்று ஆசிரியர்களுக்கும். மாணவர்களுக்கும் புற்றுநோய், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தனர். ஏற்பாடுகளை பள்ளித்தலைமை ஆசிரியர் நாகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி