தஞ்சாவூர் மாவட்டத்தில் 6. 6 டன் விதைநெல் விற்பனை செய்ய தடை

77பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டத்தில் 6. 6 டன் விதைநெல் விற்பனை செய்ய தடை
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில், சாலியமங்கலம், ஆலங்குடி, திருக்கருகாவூர், பாபநாசம், இரும்புத்தலை, கும்பகோணம் ஆகிய பகுதிகளிலுள்ள 18 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குநர் வாசுகி தலைமையில், மதுரை மாவட்ட விதை ஆய்வாளர்கள் ராஜபாண்டி, அகிலா, கோபி ஆகியோர்
ஆய்வு செய்தனர்.
இதில், சம்பா நெல் சாகுபடிக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள
விதைநெல்களின் தரம். இருப்பு அளவு, விதை சட்ட விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, "விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைநெல்லை வாங்கி பயன்படுத்த வேண்டும். விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என விதை ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்தனர்.
மேலும், 36 விதை மாதிரிகள் முளைப்புத் திறன் குறித்த ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு, தஞ்சாவூர் விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில், விதை சட்ட விதிகளை மீறியதாக ரூ. 5. 79 லட்சம் மதிப்புள்ள 6, 600 கிலோ விதைநெல்லை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
ஆய்வின்போது, தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி, விதை ஆய்வாளர்கள் சுரேஷ், பாலையன், நவீன்சேவியர், சத்யா ஆகியோர் உடன் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி