தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பூந்தோட்டத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது.
பூந்தோட்டத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 21 இல் காப்பு கட்டுதல் நடைபெற்று ஊர் பொதுமக்கள் விரதத்தை தொடங்கினர்.
ஒவ்வொரு நாள் மாலையிலும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பிள்ளயார் கோயில் குளத்தில் சக்தி கரகம், வேல், அலகு காவடி, பால்குடம் போன்றவைகளை ஆண், பெண் பக்தர்கள் எடுத்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திங்கள்கிழமை மண்ணியாற்றங்கறையிலிருந்து சக்தி கரகம், பால்குடம், வேல், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு வரவேற்று வழிபாடு நடத்தினர். பின்னர் கோயிலை வந்தடைந்து முன்புறம் உள்ள அக்னி குண்டத்தில் தீ மிதித்து நேர்ச்சை கடன்களை செலுத்தினர்.
ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மை மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.