கும்பகோணம் காவிரி ஆற்றில் குளித்த இளைஞர் மாயமானார், தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அப்புகுட்டி சந்தைச்சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் விக்னேஷ் (19), பிளஸ் டூ முடித்து விட்டு எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று (ஆகஸ்ட் 21) நண்பர்களுடன் மேலக்காவேரி பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்து குளித்தனர்.
அங்கிருந்து நீந்தி அருகில் உள்ள படித்துறைக்கு சென்றனர். அப்போது நீச்சலடித்து சென்ற விக்னேஷை காணவில்லை. உடன் வந்த நண்பர்கள் தேடி பின்னர் கிழக்கு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்து தேடி வருகின்றனர்.