புதிய மின்மாற்றிகள் அன்பழகன் எம்எல்ஏ திறந்துவைப்பு

67பார்த்தது
புதிய மின்மாற்றிகள் அன்பழகன் எம்எல்ஏ திறந்துவைப்பு
கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள திருப்புறம்பியம் ஊராட்சியில் ரூ. 5 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில், 63 கிலோ வாட் மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றி, இன்னம்பூா் ஊராட்சி புளியம்பாடி பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ. 37 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் 16 கிலோ வாட் மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றி, பாபுராஜபுரம் ஊராட்சி புண்ணியசேத்திரம் அருகில் ரூ. 5 லட்சத்து 27 ஆயிரத்து 460 மதிப்பீட்டில் 63 கிலோ வாட் மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றி மற்றும் பழவாத்தான் கட்டளை ஊராட்சி எஸ். பி. நகரில் ரூ. 9 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் 100 கிலோ வாட் மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றிகளை சாக்கோட்டை க. அன்பழகன் எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலருமான தி. கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா், மின்சார வாரிய செயற்பொறியாளா் ஜெ. திருவேங்கடம், உதவி செயற்பொறியாளா்கள் வேல்முருகன், பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி