கும்பகோணம்: வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

51பார்த்தது
கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தின் முன்பு தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (JACC), கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. 

வழக்கறிஞர் சட்ட திருத்த வரைவு மசோதா - 2025 முற்றிலுமாக ரத்து செய்யக் கோரியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்றிடவும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 25 லட்சமாக உயர்த்திடவும், மூன்று பெரும் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் செயலாளர் செந்தில் ராஜன், பொருளாளர் ராஜா சீனிவாசன் உட்பட 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி