திருவலஞ்சுழியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

69பார்த்தது
திருவலஞ்சுழியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
திருவலஞ்சுழியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணிகும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கிராமத்தில் வருகின்ற ஏப்ரல் 19-2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கும்பகோணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தேர்தல் துணை வட்டாட்சியர் செந்தில்குமார், தலைமை நில அளவர் பிரசாத், சோழன்மாளிகை வருவாய் ஆய்வாளர் சிவானந்தம், சோழன்மாளிகை சரக கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், திருவலஞ்சுழி ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி