திருநாகேஸ்வரத்தில் திமுக எம்எல்ஏ அன்பழகன் வாக்கு சேகரித்தார்

597பார்த்தது
I. N. D. I. A. கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர். சுதா அவர்களை ஆதரித்து, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, திருநாகேஸ்வரம் பேரூராட்சி பகுதிகளில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள், கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்கள். அருகில், கும்பகோணம் மாநகர திமுக செயலாளர் – மாநகராட்சி துணை மேயர் சு. ப. தமிழழகன் அவர்கள், பேரூர் திமுக செயலாளர் எஸ். தாமரைச்செல்வன் அவர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஜி. கே. எம். ராஜா அவர்கள், வீ. சிவக்குமார் அவர்கள் மற்றும் பேரூர் - வார்டு கழக நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற தலைவர் – துணைத் தலைவர் – உறுப்பினர்கள், ஒன்றிய – பேரூர் திமுக இளைஞர் அணி - மாணவர் அணி – தகவல் தொழில்நுட்ப அணி – மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள், கழக தோழர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி