ஒப்பிலியப்பன் கோயிலுக்கு சுதர்சன பக்தர்கள் பாதயாத்திரை

85பார்த்தது
ஒப்பிலியப்பன் கோயிலுக்கு சுதர்சன பக்தர்கள் பாதயாத்திரை
குடந்தை சக்கரபாணி சுவாமி
கோயிலில் சுதர்சன பக்தர்கள் குழு சார்பில் ஆங்கி
லப்புத்தாண்டில் நேற்று (1ம்தேதி)அதிகாலை 5
மணிக்கு தொடர் அகல் விளக்கு தீபங்கள் ஏற்றிஒப்பிலியப்பன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனர். சக்கரபாணி சுவாமி கோயிலில் அதிகாலை 5
மணிக்கு திரளான பக்தர்கள் தொடர் அகல் விளக்கு
கள் ஏற்றியும், ஒப்பிலியப்பன் கோயிலுக்கு பாதயாத்
திரையாக புறப்பட்டு சென்றனர். பின்னர் ஒப்பிலியப்பன்' கோயில் வேங்கடாசலபதி கோயிலில்பாதயாத்திரை சென்ற சுதர்சன பக்தர்கள் குழுவினர்33வது ஆண்டு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பிளாஸ்டிக் பைகள்பயன்பாடுகளை குறைக்கவேண்டும். பெண்கள் தங்களது வீடுகளில் பிளாஸ்
டிக்கேரிபைகள்பயன்படுத்துவதை தவிர்க்கவும்,
கோயில்களுக்கு செல்லும் போது கேரி பைகளில்
பூஜைப் பொருட்களை கொண்டுசெல்வதை கைவிட்டு,
பாரம்பரிய துணிப் பைகள், பூஜை கூடைகளை
பயன் படுத்த வேண்டும் என்று உறுதிமொழிஏற்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீசுதர்சன பக்தர்கள் குழுஅமைப்பாளர் சத்தியநாராயணன் மற்றும் குழுவினர்செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி