பேரூர் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் விழா

3300பார்த்தது
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்  பாபநாசம் தெற்கு ஒன்றிய பேரூர் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், மாவட்ட துணைச் செயலாளர் துரைமுருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமை வகித்து பாபநாசம் அரசு மருத்துவமனை, சக்கராப்பள்ளி அரசு மருத்துவமனை  வீரமாங்குடி மருத்துவமனை ராஜகிரி ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, புடவைகள் பிரட், பால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் பசுபதி கோவில் தொடக்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் முபாரக் உசேன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் துரை மணிமாறன், பாபநாசம் ஒன்றிய துணைச் செயலாளர் கருணாகரன், மாவட்ட பிரதிநிதி ராமபிரபு, ஒன்றிய தலைவர் இலசு மணி, ஒன்றிய பொருளாளர் பரமசிவம், ஒன்றிய கவுன்சிலர்கள் முகமது ஆரிப் பாபி சுதாகர், மாவட்ட அயலக அணி தலைவர் தம்பிதுரை, மின்னால் மாவட்ட சிறுபாண்மை பிரிவு துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி