கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏதென்ஸில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ள வடகிழக்கு புறநகர் பகுதியான வ்ரிலிசியாவில் கட்டடங்கள் தீயில் எரிந்து நாசமாகின. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய காட்டுத்தீ 1,00,000 ஏக்கர் நிலப்பரப்பை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இதில், 63 வயதான ஒரு பெண் பலியானார். டஜன் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.