சங்கரன்கோவிலில் மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்சி

71பார்த்தது
சங்கரன்கோவிலில் மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை, பிச்சி, வாடாமல்லி, சேவல்பூ, கேந்திப் பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இங்கு விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் சங்கரன்கோவில் பூ சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனா்.

வழக்கமாக மல்லிகைப் பூ கிலோ ரூ. 500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை விலை போகும். தற்போது வரத்து அதிகரித்துள்ளதாலும், முகூா்த்த நாள்கள் இல்லாததாலும் மல்லிகைப் பூ கிலோ ரூ. 300-க்கு விற்பனையானது.

கடந்த சில நாள்களாக மல்லிகைப் பூ விலை தொடா்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி