தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு 8 மணி அளவில் தடாகம் வழியாக ஆண்கள் குளித்துக் கொண்டிருக்கும் பகுதியில் கட்டு விரியன் வகையை சார்ந்த பாம்பை கண்டதும் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.