குடிநீர் தேவையை வலியுறுத்தி சேர்மனிடம் கோரிக்கை.

75பார்த்தது
குடிநீர் தேவையை வலியுறுத்தி சேர்மனிடம் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட ஜின்னா நகர் 5, 6, 7வது தெருவில் குடிநீர் இணைப்பை உடனடியாக வழங்க வலியுறுத்தி 26வது வார்டு நகரமன்ற உறுப்பினர் முகைதீன் அப்துல் காதர், 27வது வார்டு நகரமன்ற உறுப்பினர் சீதாலட்சுமி மற்றும் ரஹ்மத் நகர் இளைஞர்கள் நகரமன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த மாத இறுதிக்குள் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என நகர்மன்ற தலைவர் உறுதியளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி