தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நேற்று (செப்.,25) இரவு 8 மணி அளவில் சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாளுக்கு பிரமோற்ச உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனை நடைபெற்றது. சுவாமி அம்பாள் முக்கிய வீதி வழியாக வந்து வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.