தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு கொடிபட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அம்மன் சந்நிதி முன்பிருந்த கொடிமரத்தில் அதிகாலை 4. 20 மணியளவில் கொடியேற்றப்பட்டது. பின்னா் கொடிமர பீடத்துக்கு மஞ்சள், விபூதி, பால், தயிா், இளநீா், தேன், வாசனை திரவியம் மற்றும் கும்பங்கள் அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் சி. எஸ். எம். எஸ். சங்கரசுப்பிரமணியன், செயலா் பி. மாரிமுத்து, பொருளாளா் டி. குருநாதன், துணைச் செயலா் ஜி. சுப்பிரமணியன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா ஜூன் 14 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை சங்கரன்கோவில் செங்குந்தா் அபிவிருத்தி சங்கத்தினா் செய்து வருகின்றனா்.